இந்திய தூதரகம் மீது தாக்குதல்! காலிஸ்தான் ஆதரவு கும்பலின் தொடர்பு குறித்து வெளியான தகவல்

India Europe World
By Fathima Jan 23, 2026 12:22 PM GMT
Fathima

Fathima

ஐரோப்பிய நாடான குரோஷியில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடும் கண்டனம்

இந்த தாக்குதலின் போது, தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளதுடன் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்திய தூதரகம் மீது தாக்குதல்! காலிஸ்தான் ஆதரவு கும்பலின் தொடர்பு குறித்து வெளியான தகவல் | Attack On Indian Embassy In Croatia

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் குரோஷியா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.