கனடாவில் இந்திய நடிகரின் ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவிற்குச் சொந்தமான ஹோட்டல் மீதே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களில் குறித்த ஹோட்டல் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
ஹோட்டல் மீது தாக்குதல்
சர்ரேயில் அமைந்துள்ள குறித்த ஹோட்டல் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல் ஜூலை மாதம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது ஊழியர்கள் ஹோட்டலுக்குள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.