திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்..!

Trincomalee Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 30, 2024 05:28 AM GMT
Laksi

Laksi

திருகோணமலைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதலானது வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிற்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்றின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன்  புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

அதிக பணம் வசூலித்தல்

இதனையடுத்து, குறித்த குழுவினர் அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்..! | Attack On Foreign Tourists In Trincomalee

அத்தோடு,  படகு சவாரி, நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திரும்ப செலுத்தும் போது, குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து, மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கோரியுள்ளனர்.

இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

ஆனால், சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால், சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் தடிகளால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்..! | Attack On Foreign Tourists In Trincomalee

மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW