யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: ஒருவர் காயம் உடைமைகள் நாசம்

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital
By Fathima Aug 21, 2023 01:59 PM GMT
Fathima

Fathima

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு - ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடொன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (20.08.2023) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தடயவியல் பொலிஸார் 

முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சோக்கேஸ், சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர்.

மேலும், இரு மோட்டார் சைக்கிள்களையும் எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: ஒருவர் காயம் உடைமைகள் நாசம் | Attack House Left Person Injured In Chandilippai

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: ஒருவர் காயம் உடைமைகள் நாசம் | Attack House Left Person Injured In Chandilippai

இதனயைடுத்து இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிஸார் இன்று தடயங்களை ஆய்வு செய்தனர்.

வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினரகள் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.