கிழக்கிலங்கையில் சந்தித்த சீதனக் கொடுமை

Sri Lanka
By Nafeel May 07, 2023 02:29 AM GMT
Nafeel

Nafeel

பணத்திற்காக சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை விற்கும் ஆண் ஜாதியே ....

நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம் பேரம் பேசி வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??????????

அவமானம்...

அவமானம்....

கேவலம்.....

கேவலம்...

உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும் நீ மட்டும் எந்த வர்க்கம்.....


வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம் செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம்.. எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம் இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம்....

எதுவும் வேண்டாமாம் அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம்...

அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான் சீதனப் பிச்சை...

படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள்...

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று ...

பெண் மனம் புரியாது தன் மகனுக்காய் வரதட்சனை...

தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம் ஆணைப்பெற்ற அம்மாக்களின் அகங்காரம்-இது நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி பல் இளித்து பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை..

கை நீட்டி பிச்சை வாங்கும் மானமற்ற ஆண்களே !!!!!! சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும் ஒவ்வொரு கண்ணீர் துளிகளும் உம் வாழ்வை அழிக்கும் சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள் என்பதை மறவாதீர்கள்......... 

கிழக்கிலங்கையில் அண்மையில் நான் சந்தித்த சீதனக் கொடுமையில் வாழ்விழந்து இளமையைத் தொலைத்து முதிர் கன்னியாய் மூலையில் முடங்கிக் கிடக்கும் ஓர் அன்புச் சகோதரியின் இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனை நிறைந்த கண்ணீர் துளிகளின் உண்மை வெளிப்பாடாக எழுதப்பட்டது ....

(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது) -பிரியமுடன் யஸ்மின் யஹ்யா-