மக்களை ஒற்றுமைப்படுத்தும் பாதையில் இருந்தவர் தலைவர் அஷ்ரப் : அதாவுல்லா
முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக்குகின்ற பாதையில் தலைவர் அஷ்ரப் தெளிவாக இருந்தார் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு இடம்பெற்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி தேர்தலில் பல சவால்களுக்க மத்தியில் தேசிய காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக களம் நுழைகிறது. தேசிய காங்கிரஸ் என்பது இந்த நாட்டில் உள்ள தேசிய கட்சிகளில் ஒன்றாகும்.
சிறுபான்மை மக்களுக்கான குரல்
குறிப்பாக வட கிழக்கில் வாழுகின்ற சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை மாத்திரம் அல்லாது இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமை குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சியாக இருக்கின்றது.
அத்துடன், அரசியல் பொருளாதாரம் மக்களுடைய காணி பிரச்சினை அல்லது கொரோனா தொடர்பான பிரச்சனைகள் உரிமை பிரச்சினைகள் எழுகின்ற பொழுது கடந்த கால வரலாற்றில் முறையான தீர்மானங்களை மக்கள் சார்பாக எடுத்திருந்த கட்சி தேசிய காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விட முடியாது.
அதே போன்று நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தடயத்தை தவிர வேறு யாருடைய தடயத்தையும் எங்கும் நாங்கள் காண முடியாது.
தலைவர் அஷ்ரப் கடந்த காலங்களில் தேர்தல் அரசியல் செய்த காலகட்டத்தில் அவர் விட்டுச் சென்ற தடயத்துக்கு பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் எந்த ஊருக்கு போனாலும் தெசிய காங்கிரஸின் தடயங்கள் தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
முஸ்லிம்களின் ஒற்றுமை
தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது வேட்பு மனு பத்திரத்தை நிராகரிப்பதன் மூலம் தங்களுக்கு ஒரு நிவாரணத்தை பெற்றுக் கொள்வது போன்று நீண்ட காலமாக அரசியல் செய்பவர்கள் பல எத்தனங்களை நாடு முழுவதிலும் மேற்கொண்டு வந்ததை நாங்கள் பார்க்கின்றோம்.
உண்மையில் ஜனநாயக சட்டம் என்பது இந்த நாட்டில் நாம் ஏற்றுக்கொள்கின்ற மிக முக்கியமான விடயம்.
அந்த வகையில் உள்ளூராட்சித் தேர்தலை பொறுத்த வரையில் பல காலகட்டங்களில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
நான் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது அதிகமான மாற்றங்கள் அந்தச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதாவது வட்டார முறைமை கொண்டு வருவதற்கான காரணத்தினால் இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
வாக்குகளின் முக்கியத்துவம்
4000 ரூபா உதவி தருவதாக கூறுவார்கள், அந்த காலத்தில் கூட 25 ஆயிரம் ரூபாவிற்கு வீடு கட்டித் தருவதாக கூறுவார்கள், வீதிகள் கூட போட சொல்வார்கள், இவைகள் எதுவும் எமக்கு தேவையில்லை. ஒற்றுமை தான் எமக்கு தேவையாகும். நமது கொள்கைக்கு வாக்களிக்க பழக வேண்டும்.
உதாரணமாக ஊடகவியலாளர்களே இதற்கெல்லாம் உதாரமாக மாறி இருக்கின்றீர்கள். அரிசி மற்றும் பணம் கொடுத்து வாக்களிக்கும் முறையை நாம் அனுமதித்தால் இதே போன்று மற்றுமொரு அதிகரிப்பினை கொண்டு தருவாராயின் மாற வேண்டி ஏற்படும்.
தற்போது எல்லோரும் அரிசி கொடுக்கின்றார்கள். ஏன் இதையெல்லாம் கூறுகின்றேன் எனின் தேர்தல் என்பது கொள்கைக்காக வாக்களிப்பதாகும். யாருக்கு நாம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். எந்த கட்சியின் உடைய கருத்தினை பலப்படுத்த வேண்டும்.
யார் நமக்கான தலைவர். எந்த கட்சியின் உடைய மேயர் எந்த கட்சியின் உடைய தவிசாளர் எமக்கு பொருத்தமற்றவர்கள் என நமது சிறுபான்மை மக்களுக்கு தூண்ட வேண்டும்.
எமது பிராந்தியத்தில் சிறிய சிறிய அபிவிருத்திகளை செய்தவர்கள் நாங்களல்லர். ஒவ்வொரு ஊருக்கும் தகுதியான அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருக்கின்ற கட்சி தேசிய காங்கிரஸ் கட்சி தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |