கல்முனை கடற்கரை பூங்காவிற்கு ஆதம்பாவா எம்.பி கள விஜயம்

Ampara Sri Lanka Politician Eastern Province Kalmunai
By Laksi Jan 03, 2025 04:05 AM GMT
Laksi

Laksi

கல்முனை (Kalmunai) கடற்கரை பூங்கா மற்றும் அதனை அண்டிய கரையோர பிரதேசத்திற்கு பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் நேற்று (2) மாலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதிகாரிகளின் அசமந்த போக்கினால் காலம் தாழ்த்தப்பட்ட கடற்கரை பூங்கா மற்றும் அதனை அண்டிய கரையோர அபிவிருத்திகளை பார்வையிட்டார்.

அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

பணிப்புரை

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்கும் வகையில் உரிய அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவழைத்து உடனடி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை கடற்கரை பூங்காவிற்கு ஆதம்பாவா எம்.பி கள விஜயம் | Athambawa M P Visit To Kalmunai Beach Park

அத்துடன் அந்தப் பகுதியில் இடம்பெறும் கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் தடுப்புக்கற்கள் இடுவதற்குரிய வேலைகள் உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!

அபிவிருத்தி நடவடிக்கை

இதன்போது கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸிகல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை கடற்கரை பூங்காவிற்கு ஆதம்பாவா எம்.பி கள விஜயம் | Athambawa M P Visit To Kalmunai Beach Park

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தில் இருந்து உரிய அமைச்சுகளினுடனும் அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்தி மேற்கூறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery