கந்தளாயில்  காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சொத்துகள் சேதம்,  மக்கள் கவலை தெரிவிப்பு.

Trincomalee Sri Lanka
By Nafeel Apr 23, 2023 05:27 PM GMT

திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிரெண்டாம் கட்டை பகுயில்  காட்டு யானைகள் இன்று(23) அதிகாலை கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி நெல் மூடைகளை உடைத்தும் சேதப்படுத்தியும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பன்னிரண்டாம் கட்டைப் பகுதியில் நாளாந்தம் யானைகளினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  காட்டு யானைகள் நெல் மூடைகளை இழுத்துச் சென்று சாப்பிடுவதாகவும்,இரவு வேளைகளில் நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் அப்பகுதியில்  பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை  உடைத்தெறிந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். காட்டு யானையினால் எமது வீடு சேதமடைந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் கோரிக்கை விடுக்கின்றனர்.