குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

Dinesh Gunawardena Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Jun 23, 2023 11:59 PM GMT
Chandramathi

Chandramathi

அஸ்வெசும திட்டத்திற்காக குறைந்த வருமானம் பெறுவோரை தெரிவு செய்யும் கணக்கெடுப்பில் குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு வருமானம் ஈட்டுபவர்களை தெரிவு செய்வதற்கான கணக்கெடுப்பில் குறைபாடுகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று (23) நாடாளுமன்றத்தில் வௌியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.  

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல் | Aswesuma Welfare Benefit Payment

மேலும் கூறுகையில்,அந்த வேலைத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை அகற்றுவது எந்த வகையிலும் நடைபெறாது எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

முன்பை விட அதிக எண்ணிக்கையிலான குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மைகளை வழங்கும் நோக்கில் அஸ்வெசும வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளாா்.

வேலைத்திட்டத்துக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா்.