அஸ்வெசும மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு

Government Employee Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jul 09, 2023 04:42 AM GMT
Fathima

Fathima

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (10.07.2023) முடிவடையவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கமல் பத்மசிறி கூறியுள்ளதாவது, மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டுச் சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன்  முடிவடையவுள்ளது.

அஸ்வெசும மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு | Aswesuma Time Limit For Submission Of Appeals

மேன்முறையீடுகள் 

இதுவரை 08 இலட்சம் மேற்முறையீடுகளும் 10,000இற்கும் அதிக எதிர்ப்புகளும் கிடைக்க பெற்றுள்ளது.

மேலும், அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும்.

மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.