வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்
By Thulsi
நாளை முதல் பயனாளிகளுக்கு செப்டம்பர் மாத அஸ்வெசும பணம் வைப்பிலிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கணக்கில் பணம் வரவு
செப்டெம்பர் மாதத்திற்கான ரூ 8571 மில்லியனானது, அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.