வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Rakshana MA Dec 12, 2024 08:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை(13) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் சபை தெரிவித்ததாவது,

மேலும், இதன் மூலம் 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பலியான பலர்

வடக்கு மாகாணத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பலியான பலர்

கொடுப்பனவு

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்களுக்கு தமது வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல் | Aswesuma Allowance For Sri Lankan Peoples

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி நன்மைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த 4 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்களால் கசிப்பு கொள்கலன்கள் அழிப்பு

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்களால் கசிப்பு கொள்கலன்கள் அழிப்பு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW