நாட்டில் அதிகரித்து வரும் நோய் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினரிடையே ஆஸ்துமா(Asthma) நோய் அதிகரித்து வருவதாக சுவாசநோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் மத்தியில் 10 தொடக்கம் 15 வீதம் வரையான ஆஸ்துமா நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆஸ்துமா நோய்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை சுவாசநோய் தடுப்பு நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க, ஆஸ்துமா என்பது தொற்றா நோயாக காணப்பட்ட போதும் பரம்பரை அலகுகள் ஊடாக பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஆஸ்துமாவை இலகுவாகக் குணப்படுத்த முடியும் என்ற போதும் நீண்ட காலத்திற்கு அதற்கான உரிய சிகிச்சை எடுக்கப்படாத நிலையில் சுவாசக் கட்டமைப்பில் சிக்கல்கள் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் மருத்துவர் நெரஞ்சன் எச்சரித்துள்ளார்.