வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு
வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவ புளியங்குளம் கிராம அலுவலகர் பிரிவில் இச்செயற்பாடானது இன்று (17.09.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இரண்டாம் கட்டமான கட்டடங்களை நிரல்படுத்தும் செயற்திட்டமானது நாடாளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
கட்டடங்களை நிரல்படுத்தல்
இச்செயற்பாடுகளிற்காக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் நிரல்படுத்தும் உத்தியோகத்தர்களாக கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டடங்கள் மற்றும் வீடுகளிற்கு சென்று அக்கட்டிடங்கள் அங்கு வசிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இச்செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.