சிறைச்சாலை அதிகாரியை மண்டியிடச் செய்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மினுவாங்கொடை வீட்டிற்கு நேற்று வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மூவர், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும், அதிகாரியின் தாயாரும் சந்தேகநபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். அதிகாரியின் மினுவாங்கொடை இல்லத்திற்கு முகத்தை மறைத்துக்கொண்டு வந்த ஆயுததாரிகள் சிறைச்சாலை அதிகாரியை அச்சுறுத்தியதாக பேச்சாளர் கூறினார்.
தனது சகோதரியின் கைத்தொலைபேசியை எடுத்து தரையில் அடித்து நொறுக்கினார்,
பின்னர் அந்த அதிகாரியை மண்டியிட்டு கைவிலங்கு போட்டு புகைப்படம் எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார். சம்பவம் தொடர்பில் அதிகாரி மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அதிகாரி தற்போது மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது