ஆசிய சதுரங்க இறுதி போட்டியில் யாழ். சிறுமி

Jaffna Chess Sri Lanka Sports
By Harrish Nov 04, 2024 10:23 AM GMT
Harrish

Harrish

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய சதுரங்க இறுதி போட்டியில்(asian chess championship 2024) இலங்கையிலிருந்து யாழ். சிறுமி ஒருவர் போட்டியிடவுள்ளார்.

இதன்போது, யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமியே சதுரங்க வியைாட்டில் சாதனைகளை படைத்து வருகின்றார்.

வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை படைத்த சிறுமி

இதன் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக பங்குபற்றவுள்ளார்.

ஆசிய சதுரங்க இறுதி போட்டியில் யாழ். சிறுமி | Asian Chess Finals Compete Jaffna Little Girl

அத்துடன், சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக இவர் விளையாடவுள்ளார். வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார்.

சதுரங்க போட்டி

இதேவேளை, Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் அந்த சிறுமி 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ஆம் இடத்தில் உள்ளார்.

ஆசிய சதுரங்க இறுதி போட்டியில் யாழ். சிறுமி | Asian Chess Finals Compete Jaffna Little Girl

இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 ஆம் ஆண்டில் வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW