சர்வதேச ரீதியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் - குவியும் பாராட்டுக்கள்
Jaffna
Sri Lanka
Africa
By Fathima
ஆசியா - பசுபிக் - ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் தமிழ் இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
ஹொங்ஹொங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இவர் கடந்த வருடம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பளு தூக்கும் போட்டியில் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தங்க பதக்கங்களை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.