ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா கடும் ஆட்சேபம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Indian Cricket Team Pakistan national cricket team 2023 Asia Cup
By Dhayani Jun 15, 2023 05:41 PM GMT
Dhayani

Dhayani

பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடைபெற உள்ள 13 போட்டிகளில் 4 போட்டி பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் இடம்பெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா கடும் ஆட்சேபம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Asia Cup 2023

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறவுள்ளது.

இந்த போட்டி தொடர் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.