மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Fathima
அஸ்வெசும நலத்திட்டத்தின் ஒரு பகுதியினருக்கான பணம் இன்று(18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
உதவித்தொகை
அதன்படி குறித்த நலத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது.

பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.