வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

Parliament of Sri Lanka Trincomalee Sri Lanka Politician
By Rakshana MA Jan 09, 2025 08:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraff Thahir) கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

உள்ளூராட்சி மன்றங்களானது வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றது.

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

ஈட்டப்பட்ட வருமானம் 

அதற்கு மேலதிகமாக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றில் உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவில் 40 வீதத்தினை சபையின் நிதியிலிருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை | Ashraff Thahir Parliament Speech 2025

இவ்வாறான நிலையில், முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணங்கள், சொத்துக்களுக்கான வரிகள் போன்றவற்றினைக் கொண்டே உள்ளூராட்சி மன்றங்கள் வருமானம் ஈட்டிக்கொள்கின்றன.

அதேபோல, கடந்த காலங்களில் வீதிகளில் பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிக்கான வரி, துவிச்சக்கர வண்டிக்கான வரிகள் போன்றவை அறவீடு செய்யப்பட்டு வந்திருந்தாலும் தற்காலத்தில் அவற்றின் பாவனை குறைவடைந்துள்ளமையால் குறித்த வரி அறவீடு நடைமுறையில் இல்லை.

HMPV வைரஸ் குறித்து அச்சம் : பொது மக்களுக்கான அறிவித்தல்

HMPV வைரஸ் குறித்து அச்சம் : பொது மக்களுக்கான அறிவித்தல்

உறுப்பினரின் கோரிக்கை

ஆகையால், பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வருகின்ற வாகன வருமான வரி கட்டணங்களை பங்கீட்டு வரி பட்டியலில் இணைத்து அதில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கினால் அதனுடைய சேவைகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்ல முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை | Ashraff Thahir Parliament Speech 2025

மேலும், கடந்த 13 வருடங்கள் உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவராக செயற்பட்டு வந்த அனுபவத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களை நிர்வகிக்கும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் பல நிர்வாக அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலைத்தொழிலாளிகள், சுகாதார தொழிலாளிகள் போன்ற ஆளனி தட்டுப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறும் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். 

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW