மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

Batticaloa Eastern Province Crime
By Laksi Apr 02, 2025 09:22 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபா பணத்தினை மோசடி செய்த குற்றத்திற்காகவே அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் இருக்கும் முதலீட்டாளர் ஒருவர் மட்டக்களப்பில் இறால் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 10 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதில் 4 கோடி ரூபா பணம் அருண் தம்பிமுத்துவிடம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 4 கோடி ரூபாவிற்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், மொத்தப் பணத்தினையும் அருண் தம்பிமுத்து மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த முதலீட்டாளர் நிதி மோசடி தொடர்பில் அருண் தம்பிமுத்துவுக்கு எதிராக முறைப்பாடளித்திருந்த நிலையில், இன்றையதினம் அவர் பாசிக்குடா பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி பிரிவினரால் பாசிக்குடா பகுதியில் வைத்து அவர் இன்றையதினம் (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நிதி மோசடி

நிதி மோசடி வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தினை மோசடிச் செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது | Arun Thambimuththu Arrested In Batti

இதனையடுத்து, மோசடிக்கு இலக்கான வெளிநாட்டவரின் முறைப்பாட்டுக்கு அமைய அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW