அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது
அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறுபேர் கைது
இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அறுகம் குடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை அறிவுறுத்தியது.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அறுகம் குடா பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |