கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கு நேர்ந்த கதி
பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (11.07.2023) கொழும்பு மருதானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் குழுவினர் டிஃபென்டர் ரக ஜீப் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில், வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போதிலும், அந்த உத்தரவை மீறி வாகனம் செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது மாணவிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பொலிஸார் மாணவிகளைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த டிஃபென்டர் ரக ஜீப் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.