தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற தம்பதியினர்:பாதுகாப்பு பிரிவினரால் கைது

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Madheeha_Naz May 31, 2023 12:48 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

கொழும்பில் அமைந்துள்ள  தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற இளம் தம்பதியினரை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பார்வையிட சென்ற இளம் தம்பதியினர் கோபுரத்தின் சுவரில் எழுதும் போது நேற்று (30.05.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற தம்பதியினர்:பாதுகாப்பு பிரிவினரால் கைது | Arrested By Security Forces In Sri Lanka

பாதுகாப்பது மக்களின் பொறுப்பு

இவ்வாறான செயற்பாடுகளால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் முதன்மை இல் இணையுங்கள் JOIN NOW