வக்ப் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் அவசரமாக செய்யப்படல் வேண்டும். - எம் எஸ் தௌபீக் எம்.பி

Trincomalee Sri Lanka
By Nafeel May 13, 2023 09:13 AM GMT
Nafeel

Nafeel

தற்போது எமது நாட்டில் சில வக்ப் சொத்துக்கள் முறையான பரிபாலனம் இல்லாமல் சீரழிக்கப்படுவதும், தவறான முறையில் பயன்படுத்தப்படும் நிலையும் காணப்டுகிறது.

எமது வக்ப் சொத்துக்களை உரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகள் அவசரமாக செய்யப்படல் வேண்டும் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, வக்ப் சொத்துக்களானது முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் வசதி படைத்தவர்களால் தமது மறுமை ஈடேற்றத்திற்காகவும் சமூக நல நோக்கம் கருதியும் சமூக, மார்க்க நிறுவனங்களுக்கு அன்பளிப்புக்களாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படுகின்ற சொத்துக்களை சில தனிநபர்கள் கையகப்படுத்த முயற்சிக்கின்ற செய்திகள் அடிக்கடிவருகின்றன. இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எமது சமூக நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாப்பது எமது தலையாய கடமை எனவும் தெரிவித்தார்.

அதேபோல் அண்மையில் மகரகம பிரதேசத்தில் அமைந்துள்ள கபூரியா மத்ரஷாவிற்கு வக்ப் செய்யப்பட்ட சொத்துக்களை தனிநபர் சொத்துக்களாக மாற்றுவதற்கு முயற்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

அதன் ஓர் அங்கமாக கபூரியாவில் கற்று வந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பலவந்தமாக வெளியேற்றியிருக்கிறார்கள்.

இதனைபோன்று ஏனைய சில வக்ப் சொத்துக்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமதூ வக்ப் சொத்துக்களை பாதுகாப்பதற்கு வக்ப் சபையான தமது அதிகாரத்தை பயன்படுத்தி வக்ப் சொத்துக்களை பாதுகாக்க முன்னிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் பாதுகாப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் அவசரமாக செய்யப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.