ரணிலையடுத்து குறி வைக்கப்படும் அர்ஜுன் மகேந்திரன்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு (Arjuna Mahendran) நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) நீதிவான் நீதிமன்றம் குறித்த அழைப்பாணையை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடி
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் இலஞ்சச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்த பின்னர், குறித்த அழைப்பாணை உத்தரவினை ஆங்கில மொழியில் வெளியிடவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அழைப்பாணை உத்தரவு
சிங்கப்பூரில் வசிப்பதாகக் கூறப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்த அழைப்பாணையின் பிரகாரம் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு மேலதிக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, மீண்டும் அழைப்பாணை உத்தரவு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |