முஸ்லிம் பிரதிநிதிகளில் திறமையானவர்கள் இல்லையா : கேள்வியெழுப்பிய இம்ரான் எம்.பி

SJB Imran Maharoof Weather Floods In Sri Lanka
By H. A. Roshan Dec 15, 2024 11:55 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

Courtesy: H A Roshan

இந்த வெள்ள அனர்த்தத்தில் மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவும் என்று எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்( Imran Maharoof)  தெரிவித்துள்ளார்.

இன்று(15) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா சோலை வெட்டுவான், மயிலடைப்பஞ்சேனை மக்களுக்கு உலர் உணர்வுப் பொருட்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடு

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இப்பகுதியில் கடற்தொழில் விவசாயம் வீட்டுத் தோட்டங்களை நம்பி வாழ்வாதாரத்தை மக்கள் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்த அரசாங்கம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என தெரிவு செய்த போதிலும் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை கூட கவனிக்கவில்லை.

முஸ்லிம் பிரதிநிதிகளில் திறமையானவர்கள் இல்லையா : கேள்வியெழுப்பிய இம்ரான் எம்.பி | Are There No Competent Muslim Representatives

இந்த அராங்கம் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்து வாக்களித்தார்கள் எனினும் மக்களுக்கு வெறும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

தேர்தல் காலங்களில் புதியவர்களை திறமையானவர்களை படித்தவர்களை தெரிவு செய்வோம் என கூறிய போதிலும் தற்போதைய சபாநாயகர் பதிவி கலாநிதி பட்டம் தொடர்பில் அவர்களே நம்பிக்கையிழந்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள் இன்னும் எதை எதையெல்லாம் சொல்லி ஏமாற்றப்போகிறார்களோ என்று மக்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இந்த வெள்ள அனர்த்தத்தில் மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவும் என்று எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 சபாநாயகர் பதவி

நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் இந்த அரசாங்கத்தின் எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சபாநாயகர் பதவியில் ஏற்பட்டுள்ள அந்தப் பிரச்சினை இன்று பெரும் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதிநிதிகளில் திறமையானவர்கள் இல்லையா : கேள்வியெழுப்பிய இம்ரான் எம்.பி | Are There No Competent Muslim Representatives

குறிப்பாக சபாநாயகருடைய தகைமை சம்பந்தமான செயற்பாடுகள் இன்று அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பெயர்களை நீக்குகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கம் படித்தவர்கள் வரவேண்டும் பட்டம் பெற்றவர்கள் வரவேண்டும் புதியவர்கள் வரவேண்டும் என்றெல்லாம் கூறினார்கள் சென்ற அமைச்சரவை வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு தகுதி இல்லை என்று பேசினார்கள்.அதனால் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள்.

இன்று மக்கள் மத்தியில் என்ன சொல்லப் போகின்றார்கள். உங்களுடைய வேலை திட்டம் எல்லாம் துரிதப்படுத்தபட வேண்டும் 24 மணித்தியாலயங்களுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொன்னவர்கள் இன்று ஒன்றரை மாதங்கள் கழிந்தும் அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை உங்கள் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் கிண்ணியா நகர சபையின் முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.