மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Tiran Alles Sri Lanka SL Protest
By Fathima Aug 30, 2023 04:41 PM GMT
Fathima

Fathima

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பின்னர் பிாதிவாதிகளால் மீளப்பெறப்பட்டது.

மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம் | Aragalaya Protest May 9 Cid Investigation

வன்முறை சம்பவங்கள்

இந்த வழக்கானது, இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் செய்த தவறுகள், வன்முறைகள் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்பாக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட தலைமையிலான விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புதிய அறிக்கையின் அடிப்படையில் புதிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW