கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பையின் சேவையைப் பாராட்டி கல்முனை மாநகர மக்களால் கெளரவிப்பு
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையேற்று வினைத்திறனாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஏ. எல். எம். அஸ்மி அவர்களின் நேர்த்தியானதும்,
நேர்மையானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மாநகர மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆஷாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் கடந்த செவ்வாய் கிழமை (18) இடம்பெற்ற கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வின் போதே இக்கெளரவம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.
கடமையைப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் காத்திரமான பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் ஆணையாளரின் சேவையைப் பாராட்டியே இக்கெளரவம் கல்முனை மக்கள் சார்பாக கல்முனையன்ஸ் போரமினால் வழங்கப்பட்டது.
மாநகர ஆணையாளருக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்), தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கல்முனையின் முதுசம் என அழைக்கப்படும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம். நஸீர் ஹாஜி மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி இக்கெளரவம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பெருந்திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.