தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவுக்கு ரவூப் ஹக்கீம் நியமனம்
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பணியாற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம்(09.06.2023) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு வேலையிலேயே இதனை சபைக்கு அறிவித்தார்.
பிரதி சபாநாயகரின் அறிவிப்பு
பிரதி சபாநாயகர் தொடர்ந்து அறிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அங்கத்துவத்தை இராஜினா செய்துள்ளார்.
இதனால் அந்த இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 130 (3) இன் ஏற்பாடுகளுக்கு அமைய, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச 8 ஆம் திகதி கூடிய தெரிவுக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் சேவையாற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.