நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன
நாடாளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் பிரதி செயலாளர் நாயகமாக சட்டத்தரணி சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக பதவி வகித்த டிக்கிரி ஜயதிலக்க மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ள நிலையில் அவரது வெற்றிடத்திற்கே சட்டத்தரணி சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சமிந்த குலரத்ன நியமம்
கட்சித் தலைவர்களின் பங்கேற்புடனான நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதியையடுத்து பணிக்குழு ஆலோசனை சபை மூலம் மேற்படி பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்ததுடன் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உயர்மட்ட நேர்முகப் பரீட்சை சபை மூலம் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு சட்டத்தரணி சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரின் தலைமையிலான நேர்முகப்பரீட்சைக்கான குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.