கல்வியியற்கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

By Fathima Mar 16, 2024 04:45 AM GMT

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நேற்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு 

கல்வியியற்கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் | Application To College Of Education

அத்துடன், அடுத்த மாதம் 5 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.