நேபாளத்தில் நிலச்சரிவு: 60 பயணிகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்
நேபாளத்தில் (Nepal) நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமற்போனவர்களில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத் தலைநகர் கத்மண்டுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகளே நிலச்சரிவினால், திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. இரண்டு பேருந்துகளிலும் சுமார் 65 பேரளவில் இருந்த நிலையில், காணாமற்போன குறித்த நபர்களை தேடும் பணிகள் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேவ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்பு பணி
அவற்றில் 6 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாதாதல் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவர்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேருந்துகள் நிலச்சரிவில் சிக்குண்ட சம்பவத்தில் மூவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர் என்றும் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |