பணிப்புறக்கணிப்பை கைவிடும் அரச வைத்தியர்கள்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான அத்துமீறல் சம்பவத்தையடுத்து, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) கைவிடப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண ஆளுநர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவமனை வளாகத்தினுள் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வதாக உறுதியளித்தமையை தொடர்ந்து, மிருகத்தனமான தாக்குதலை நிவர்த்தி செய்ய அதிகாரிகளின் நேர்மறையான பதில், நோயாளிகளிடம் சுகாதாரப் பணியாளர்களின் பொறுப்பு போன்ற முக்கிய காரணங்களைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இது தொடர்பாக GMOA தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று காலை 08.00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் GMOA 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
அதற்கேற்ப தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு வைத்தியசாலை வளாகத்திலுள்ள அவரது உத்தியோகபூர்வ விடுதிக்குள் பெண் வைத்தியர் ஒருவர் மீதான அத்துமீறலை அடுத்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் GMOA இணைந்து வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆரம்பிதிருந்தனர்.
இந்நிலையில், மறுநாள் கல்நேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |