கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

Colombo Anura Kumara Dissanayaka Sri Lanka
By Laksi Sep 28, 2024 09:37 AM GMT
Laksi

Laksi

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பு

இந்த நிலையில்,  கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி | Anura Visit To Colombo International Book Fair

இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது.

 இதன்போது, பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery