முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் மோடியை சந்தித்த அனுர: இம்ரான் பகிரங்கம்
முஸ்லிம்களையும் சிறுபான்மை மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அநுரவும் அவரது சகாக்களும் இந்தியா சென்றனர் என நா்டாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புல்டோஷரை கொண்டு முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் குஜராத் மாநில முதலமைச்சரை அநுர சந்தித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (29) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒப்பந்தம்
மேலும் தெரிவிக்கையில், குஜராத் முதலமைச்சருடன் என்ன ஒப்பந்தம் செய்தார். அதானி குழுமத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார், மோடி அரசாங்கத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார் என்பது இதுவரை காலமும் அவர் வெளிப்படுத்தப்படவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக எப்பொழுதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் அநுர இந்திய விஜயத்தின் பின் இந்தியாவின் முதலீடுகளுக்கு எதிராக இதுவரை எந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இஸ்ரேலுடனும் தேனிலவு
இது தவிர இவர்கள் அடுத்தடுத்து மேற்கு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவர்களின் கொள்கை தான் என்ன?இன்று இஸ்ரேலை எதிர்ககும் அநுரவும் சகாக்களும் நாளை இஸ்ரேலுடனும் தேனிலவு கொண்டாட மாட்டார்கள் என எப்படி நம்புவது?
எனவே நாங்கள் இந்த அநுர விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |