சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஏற்க முடியாது : ஜனாதிபதி

Anura Kumara Dissanayaka Hospitals in Sri Lanka Strike Sri Lanka National Health Service Budget 2025
By Rakshana MA Mar 20, 2025 05:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையிலான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன் ..!

மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன் ..!

அரசாங்கத்தின் கவனம் 

இந்நிலையில், வரையறுக்கப்பட்ட செலவுகளுக்கு உட்பட்டிருக்கும் தற்போதைய பொருளாதார நிலையிலும் கூட அரச சேவையை வினைத்திறனாக ஈடுபடுத்தல், தகைமையுள்ள நபர்களை அரச சேவைக்கு ஈர்த்துக் கொள்ளல் மற்றும் அரச சேவையை ஊக்குவிப்பதற்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஏற்க முடியாது : ஜனாதிபதி | Anura Rejects Health Workers Strike Amid Pay Hike

அத்தோடு, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 06 முறைமைகளில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மிகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 15,000 ரூபாவினால் அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரித்தல் , விடுமுறை நாள் கொடுப்பனவு அதிகரித்தல், 80% வீதத்தினால் வருடாந்த சம்பள அதிகரித்தல், முழுமையான சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை அதிகரித்தல் என்பவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

காஸா மக்களுக்காக துஆ..!

காஸா மக்களுக்காக துஆ..!

கோரிக்கை 

இந்நிலையில், இது தொடர்பில் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், 

இந்த சம்பள அதிகரிப்பு அரச சேவையில் அதிகளவானவர்களால் பாராட்டப்படுள்ளது. அது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டுகின்றோம் என கூறியுள்ளனர்.

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஏற்க முடியாது : ஜனாதிபதி | Anura Rejects Health Workers Strike Amid Pay Hike

அத்துடன், தாதியர் சேவையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அவற்றுக்கு துரித தீர்வு பெற்றுத் தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

நுகர்வோருக்கு நிவாரணப் பை வழங்கும் திட்டம் : அமைச்சரின் அறிவிப்பு

இறக்குமதி வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

இறக்குமதி வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW