அச்சுறுத்தல் காரணமாகவே அனுர பதவி விலகினார்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Government Udaya Gammanpila
By Fathima Jun 14, 2023 10:10 AM GMT
Fathima

Fathima

அச்சுறுத்தல் காரணமாகவே அனுர மனதுங்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் பேரால் காணிகள் சுவீகரிக்கப்படுவது குறித்து அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து அனுர மனதுங்க விலகியுள்ளார். 

பதவி விலகல் 

அச்சுறுத்தல் காரணமாகவே அனுர பதவி விலகினார் | Anura Manatunga Resig Due To Threat

இந்த நிலையில் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டவிரோதமான உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளவே தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல் செய்துள்ளார்.

அத்துடன் அவர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாகவே அனுர பதவி விலகினார் | Anura Manatunga Resig Due To Threat

அவரது பதவி விலகலுக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

இதற்கிடையே அனுர மனதுங்கவின் பதவி விலகல் குறித்து மெதகொட அபயதிஸ்ஸ தேரரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.