ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது: அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்புக்கு முரணாக எவ்வாறான சதிகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனு தாக்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதித் தேர்தலைத்தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வகையில் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார்.
அதனடிப்படையில் சிலர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
எவ்வாறாயினும் அனைத்து சதிகளும் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பே வரும்.
எதிர்வரும் 17ஆம் திகதியுடன் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும்.
அதன்பின்னர் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.
இதையைடுத்து ஐந்து அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்.
குறிப்பாக ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |