நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்போம்: அனுர உறுதி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Harrish Aug 12, 2024 08:34 PM GMT
Harrish

Harrish

எமது நாட்டையும் மக்களையும் நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஜனாதிபதி தேர்தல் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளைச் சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம்.

நாங்கள் மிகவும் பலம் பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இன்று வரை இந்தப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்போம்: அனுர உறுதி | Anura Kumara Dissanayaka Press Meet Speech

இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று குறைவான நாட்களே இருக்கின்றன. இந்த குறைவான நாட்களில் நாங்கள் மிகவும் பலம் பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

கிராமங்களில் மிகவும் வலிமை மிக்க ஒரு ஒழுங்கமைப்பும் அதைப்போலவே, தேசிய மக்கள் சக்திக்குச் சொந்தமான பலம் பொருந்திய குழுக்களும் இருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலை நிச்சயமாக எங்களால் வெற்றிகொள்ள முடியும்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்போம்: அனுர உறுதி | Anura Kumara Dissanayaka Press Meet Speech

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார்.

எனவே, இன்று வேட்புமனுவில் நான் இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம்." என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு

சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW