ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்யவில்லை! முஜிபுர் ரஹ்மான் உத்தரவாதம்
அனர்த்த பேரழிவு சம்பவத்தை பயன்படுத்தி அநுர அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச் செல்ல முடியாது.

நாம் இந்த ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.
கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை.
ஆனால், தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்திருந்தால் இந்த அனர்த்த நேரம் என்ன நடந்திருக்கும்" என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார்.