பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்! கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் தீர்மானம் (PHOTOS)

Batticaloa Sri Lanka
By Dhayani May 14, 2023 04:26 PM GMT
Dhayani

Dhayani

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி அல்மனார் மாநாட்டு மண்டபத்தில் இன்று 14/05/2023 ஒன்றுகூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளினால் மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புல்மோட்டை, குச்சவெளி, திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர் தோப்பூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி, சம்மாந்துறை,மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகள் மேற்படி தீர்மானங்களை காத்தான்குடியில் ஒன்றுகூடி இன்று நிறைவேற்றி ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி தீர்மானங்களை பிரதேச பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள், மஜ்லிசுஸ் சூரா அமைப்புகள், உலமா சபைகள் ஊடாக தனித்தனியாக அரசாங்கத்திற்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்! கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் தீர்மானம் (PHOTOS) | Anti Terrorism Act Resolution Of Muslim Community

உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானம்

மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசின் பிரதிபலிப்பை அவதானித்து தேவைப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சார்பாக காத்தான்குடியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் குழுவாக இயங்கி மேற்கொண்டிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்! கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் தீர்மானம் (PHOTOS) | Anti Terrorism Act Resolution Of Muslim Community

இந்த ஒன்றுகூடலின் அறிமுக உரையை சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. உவைஸ்ஸும், நன்றி உரையை IWARE அமைப்பின் தலைவி அனீசா பிர்தெளஸ்ஸும், பங்குபற்றுனருக்கான முதாக்கறா நிகழ்வை விரிவுரையாளர் ரிஸ்வி மஜீதியும், நிகழ்வின் இணைப்பாளர்களாக ஹமால்தீன் மற்றும் MIMமக்பூல் ஹாஜியா ஆகியோரும் செயற்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் சபீழ் நழீமி நெறிப்படுத்தியுள்ளதுடன், ஆலோசகராக பொறியியலாளர் MM .அப்துர் ரஹ்மான் செயற்பட்டுள்ளார். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery