மீண்டும் ஈரானில் தலைதூக்கும் போராட்டங்கள்.. வெளியான எச்சரிக்கை
இன்னும் சில தினங்களில் ஆட்சிக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகமது பாகர் சொல்கத்ர் தலைமையிலான இந்தச் சபையின் மதிப்பீட்டின்படி, பொருளாதார நெருக்கடியே இந்த அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானியர்களுக்கு சிக்கல்..
குறிப்பாக, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை இன்னும் 6 முதல் 8 வாரங்கள் மட்டுமே ஈரானால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும், வசந்த காலத்தின் இறுதிக்குள் தனியார் துறையில் சுமார் 2 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றும், அது எப்போது தொடங்கும் என்பது மட்டுமே தற்போதைய கேள்வி என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் இந்த உள்நாட்டு நெருக்கடி மற்றும் பொருளாதார முடக்கம் சர்வதேச மட்டத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.