மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கியுள்ள கால அவகாசம்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 24, 2024 07:15 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த மொஹமட் இல்லியாஸ் காலமானதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக மேலும் ஒருவரை போட்டியிடச்செய்ய முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மொஹமட் இல்லியாஸ் மரணமானார் என்பதை உறுதி செய்யும் வகையில் மரண சான்றிதழை சமர்ப்பித்து வேறு ஓர் வேட்பாளரை போட்டியிடச் செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அக்கறைப்பற்று மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அக்கறைப்பற்று மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

பெயரும் சின்னமும்

இந்நிலையில், அமரர் இல்லியாஸின் சார்பில் வேட்பு மனுவில் கையொப்பிட்ட நபரினால் வேறு ஒரு வேட்பாளரை பெயரிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கியுள்ள கால அவகாசம் | Another Replaces Mohamed Illyas

பதிலீடாக வேட்பாளரை பெயரிடுவதற்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குச் சீட்டில் அமரரின் இல்லியாஸின் பெயரும் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அதில் மாற்றமிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மொஹமட் இல்லியாஸ் நேற்று முன்தினம் மாரடைப்பினால் காலமானார்.  

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கடந்த 5 மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது

கடந்த 5 மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW