இலங்கை அதிபர் தேர்தல்: இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு தாக்கல்

Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 13, 2024 05:21 AM GMT
Aadhithya

Aadhithya

இலங்கை அதிபர் தேர்தலை தடுக்க கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மனுவானது சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் நேற்றையதினம்(13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பில் அலி சப்ரி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பில் அலி சப்ரி வெளியிட்டுள்ள தகவல்

அதிபர் தேர்தல்

மேலும், 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல்: இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு தாக்கல் | Another Petition Stop The Presidential Election

இதேவேளை,இலங்கை (Sri Lanka) அதிபர் தேர்தலானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் அல்லது 12ஆம் திகதிகளில் நடைபெற சாத்தியம் உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாமென சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW