குடிநீர் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Climate Change Water
By Rakshana MA Apr 15, 2025 08:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

இன்றைய தினம்(15) நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிகளவில் தண்ணீரை பருகுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பநிலை உயர்வாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

கவனமாக இருக்க வேண்டியவர்கள் 

இது தொடர்பில் திணைக்களம் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

குடிநீர் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Announcements For Sri Lankan Peoles

அத்துடன், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் என அறிவுறுத்தியுள்ளது.

இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

திருகோணமலையில் கோரவிபத்து : ஒருவர் பலி

திருகோணமலையில் கோரவிபத்து : ஒருவர் பலி

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW