இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு முக்கிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Rakshana MA
இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பள்ளிவாயல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக சுருக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி பாவனை
அத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாயல்களில் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக ளுஹர், அஸர் நேரங்களில் வெளி ஒலிபெருக்கிப் பாவனைகளை நிறுத்தி உள்ளக ஒலிபெருக்கியை மட்டும் பாவித்து மாணவர்கள் பரீட்சைகளை சிரமமின்றி எழுதுவதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |