பொதுத் தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு
மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம்.
கிராம மக்கள்
அப்போது ரணில் விக்ரமசிங்க மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம்.
அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.
இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார்.
இப்போது ரணில்தான் சரியானவர் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |