நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Water Cut
By Rukshy Mar 25, 2025 07:24 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பல பகுதிகளில் நீர் வெட்டு குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்வரும், 27 ஆம் திகதி காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement Regarding Water Cut

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

இன்றைய நாளுக்கான தங்க விலை : வாங்கவுள்ளேருக்கு வெளியான தகவல்

இன்றைய நாளுக்கான தங்க விலை : வாங்கவுள்ளேருக்கு வெளியான தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW