அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Rakshana MA Feb 25, 2025 04:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் அண்மைக்காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

இதன்படி, 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்தலி விலை 800 ரூபாயாக குறைந்துள்ள நிலையில், 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கொண்டைக்கடலை 600 ரூபாவாக குறைந்துள்ளது.

மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய பாடசாலை தூண்கள்

மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய பாடசாலை தூண்கள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 

கடந்த ஆண்டு அதிகரித்த வெங்காயத்தின் விலை, இந்த ஆண்டு 800 ரூபாவாக உயர்ந்தது. எனினும் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தை 200 முதல் 220 ரூபாய் வரை கொள்வனவு செய்ய முடியும்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 320 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 165 ரூபாயாக உள்ளது. கடந்த காலத்தில் 600 ரூபாயாக உயர்ந்திருந்த டின் மீன் விலை இன்று 380 ரூபாயாக குறைந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல் | Announcement Regarding The Price Of Essential Food

இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், ஒரு முட்டையின் விலை 60 முதல் 65 ரூபாய் வரை இருந்தது. இன்று ஒரு முட்டையின் விலை 27 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னதாக கோழி இறைச்சி விலை கிலோ ஒன்றுக்கு 1,600 ரூபாயாக இருந்தது. இன்று, ஒரு கிலோ கோழி இறைச்சி 900 முதல் 1,000 ரூபாயில் வரை கொள்வனவு செய்ய முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW